கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வால்பாறையில் தென் மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், வன வளம் பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறைக்கு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்துள்ள யானைகள் பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் முடிஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் யானைக் கூட்டம் சுற்றி திரிந்தது இதைப்பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நமது செய்தியாளர் வடிவேல்
Tags:
Elephant