Followers

மூணார் அருகே ஏலக்காய் தோட்டத்தில் உள்ள குழியில் விழுந்த புலியை வனத்துறை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் வனப்பகுதியில் விடுவித்தனர் வனத்துறையினர்

 மூணார் அருகே ஏலக்காய் தோட்டத்தில் உள்ள குழியில் விழுந்த புலியை வனத்துறை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் வனப்பகுதியில் விடுவித்தனர் வனத்துறையினர்


மூணார்

கேரளா மாநிலம் மயிலாடும்பாறை அருகே ஏலக்காய் தோட்டத்தில் இருந்த 8 அடி ஆழமான குழிக்குள் ஒரு புலி மற்றும் நாய் தவறி விழுந்துள்ளது. இதைப் பற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .


ந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நாய் மற்றும் புலியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு புலியை வாகனத்தில் ஏற்றி பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது மேலும் புலியின் முகத்தில் முள்ளம்பன்றி முள் இருப்பது உறுதி செய்யப்பட்டது அதை அகற்றப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் புளியை விடுவித்தனர் வனத்துறையினர்


நமது செய்தியாளர் சுஜித்

Post a Comment

Previous Post Next Post