கோத்தகிரி அருகே உள்ள கண்ணேரிமூக்கு பகுதியில் இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தை
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் என்னிக்கை அதிகமாக காணப்படுகிறது
இந்த நிலையில் கோத்தகிரி அருகே கண்ணேரி மூக்கு சாலையில் சர்வ சாதாரணமாக சிறுத்தை ஒன்று நடந்து சென்றது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். சற்று நேரம் சாலையில் உலா விய சிறுத்தை தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. மறைந்தது இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது
நமது செய்தியாளர்: கரன்சி சிவக்குமார்