வால்பாறை டேன்டீ ரயான் டிவிசனில் காட்டுமாடு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் நிவாரண உதவி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டம் ரயான் டிவிசனில் குடியிருந்துவருபவர் செல்லத்துரை வயது 64 இவர் அங்குள்ள மாரியம்மன் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார் இந்நிலையில் வழக்கம்போல நேற்று மாலை மாரியம்மன் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு வீடு திரும்பி சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் மறைந்திருந்த காட்டெருமை எதிர்பாராத விதமாக தாக்கியதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இச்சம்பவத்தை தொடர்ந்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் உத்தரவிற்கிணங்க துணை இயக்குநர் வழிகாட்டுதலின் படி காட்டுமாடுதாக்கி உயிரிழந்தவரின் மனைவி சரஸ்வதியிடம் வனத்துறை சார்பாக ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் ரூபாயை மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன், வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஜேபிஆர் என்ற ஜே.பாஸ்கர் மற்றும் பலர் முன்னிலையில் வழங்கி ஆறுதல் கூறினர்
நமது செய்தியாளர்: வால்பாறை ரவிச்சந்திரன்