பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் மக்னா யானை உயிரிழப்பு..
தர்மபுரி மாவட்டத்தில் மைக்கூசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டது..
இந்த யானை மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி பொள்ளாச்சி வழியாக கோவை நகருக்குள் புகுந்து உலா வந்த நிலையில் மீண்டும் மயக்கூசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டு வால்பாறை மானாம்பள்ளி பகுதியில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் வனத்துறையினர் விடப்பட்டு கண்காணித்து வந்தனர்..
ஆனால் இரண்டாவது முறையாக வனப்பகுதியை விட்டு வெளியேறிய மக்னா யானை பொள்ளாச்சி அடுத்துள்ள சரளபதி பகுதியில் முகமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தியது இதனால் கோபம் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் மீண்டும் மயக்கூசி செலுத்தி பிடிக்கப்பட்டு வால்பாறை சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்..
இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள சத்தி எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த மக்னாயானை திடீரென உயிரிழந்துள்ளது..
மக்னா யானை உயிரிழப்பு வனத்துறையினருடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்னா யானை பாறையில் இருந்து வழிக்கு விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நாளை உடற்கூறு ஆய்வுக்கு பின்பு யானையின் இறப்பு குறித்து முழுமையான தகவல் தெரிய வரும்
நமது செய்தியாளர் வடிவேல்
Tags:
Elephant