Followers

கேரள மாநிலம் வயநாடு அருகே யானையுடன் செல்பி எடுக்க முயன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் நடவடிக்கை

 கேரள மாநிலம் வயநாடு அருகே  யானையுடன் செல்பி எடுக்க முயன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் நடவடிக்கை








கேரளா மாநிலம் வயநாடு சுமார் 344,44 கிலோமீட்டர் பரப்பளவில்  சுல்தான் பத்தேரி, முத்தங்கா, குறிச்சியாட் மற்றும் தோல்பெட்டி ஆகிய நான்கு மலைத்தொடர்கள் கொண்ட வனப்பகுதியாகும் இங்கு யானை, சிறுத்தை புலி அதிகமாக வாழ்ந்து வருகின்றன இந்நிலையில் வனப்பகுதி ஒட்டி உள்ள சாலைகளில் அவ்வப்போது சிறுத்தை, யானைகள் நடமாடுவது வழக்கம் அதேபோல சுல்தான் பத்தாரி வனச்சாலையில் சுற்றுலாப் பயணிகள் சென்றுகொண்டிருந்தபோது காட்டு யானை நிற்பதை கண்ட சுற்றுலாப் பயணிகள் காரை நிறுத்தி யானை அருகே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர் அப்போது யானை சத்தம்போட்டு எச்சரிக்கை விடுப்பதைப்போல  பிழிறியுள்ளது இதை எதிர்பாராத  சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து ஓடி  காரை எடுத்து சென்றுள்ளனர்  இந்த காட்சி அவ்வழியாக சென்ற மற்றொரு வாகனத்தில் நின்றிருந்த சுற்றுலா பயணிகள் வீடியோவாக படம் எடுத்து  சமூக வலைதளங்கள் பதிவிட்டுள்ளனர் இதையறிந்த வயநாடு வனத்துறையினர் காட்டு யானையை தொந்தரவு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஏற்கனவே வால்பாறை சாலக்குடி சாலையில் யானையிடம்  தொந்தரவு செய்த வீடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில் மேலும் நடைபெற்றுள்ள மற்றொரு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது


நமது செய்தியாளர் ஹனீஸ்

Post a Comment

Previous Post Next Post