Followers

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளால் இனப்பெருக்க காலத்தில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் காட்டுயானைகளின் நலன்காக்க உறுதியேற்போம்

 அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளால் இனப்பெருக்க காலத்தில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் காட்டுயானைகளின் நலன்காக்க உறுதியேற்போம்





கோவை மாவட்டம் வால்பாறைக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து தொடர்ந்து சுமார் நூற்றுக்கணக்கான யானைகள் தனித்தனிக் குழுக்களாக பிற வனப்பகுதியிலிருந்து வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி, ஷேக்கல்முடி மற்றும் மளுக்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக வந்து சோலையார் பஜாரில் உள்ள சிலுவை மேடு மலைப்பகுதியில் ஒட்டுமொத்த யானைக்கூட்டங்களும் ஒருங்கிணைந்து அங்கிருந்து தனித்தனி குழுக்களாகப்பிரிந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் உள்ள அவைகளுக்கு இணக்கமான வனப்பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் முகாமிட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு குட்டிகளை ஈன்றெடுக்கின்றன இந்த காலகட்டத்தில் ஈன்றெடுக்கும் தனது குட்டிகளுக்கு மண்வளம்,உணவு  முறைகள், வாழும் இடம்,சுற்றுப்புற சூழ்நிலைகள், வழித்தடங்கள் உள்ளிட்ட அனைத்து  பழக்கவழக்கங்களையும்   கற்றுக்கொடுத்து சுமார் ஆறுமாத காலங்கள் வால்பாறை சுற்றுவட்டாரப்பகுதிகளிலேயே சுற்றித்திரிந்து  பிப்பிரவரி மாதம் முதல் மார்ச் மாதத்திற்க்குள்  மீண்டும் வால்பாறை பகுதியை விட்டு சென்று விடுகின்றன இப்படி ஆண்டுதோறும் இடம்பெயரும்  காட்டுயானைகளில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட யானைகள் வந்ததில்  பெரும்பாலான யானைகள் வால்பாறை எல்லைப்பகுதி முதல்  பல்வேறு எஸ்டேட் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளதாகவும் இவைகளின் தேவைகளான தண்ணீர், உணவு தேவைகளுக்காக வனப்பகுதியிலிருந்து வெளியேறி பல நேரங்களில் எஸ்டேட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுவதாகவும்     அதேவேளையில் யானைகள் தங்களின் குட்டியை ஈன்றெடுக்கும் நேரத்திலும் ஈன்றெடுத்த குட்டிகளுடன் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கும் நேரத்திலும் தான் தீபா ஒளி திருநாளை நாம் பட்டாசு வெடித்து வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம் அது இயல்பு ஆனால் தனது ஈன்றெடுத்த குட்டிகளுடன் இருக்கும் யானைகள் அதிக சத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் அச்சமடைந்து ஈன்றெடுத்த குட்டிகளை பாதுகாத்துக்கொள்ள கோபமடைந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தும் எதிர்பாராத சூழ்நிலை உருவாகிறது இந்நிலையில் சில யானைகளின் வயிற்றில் உருவாகியிருக்கும் குட்டிகள் அதிர்வலைகளால் உயிரிழக்கும் அசாதாரண சம்பவங்களும் நிகழ வாய்ப்புள்ளதாகவும் யானைகள் பற்றிய சமூக  ஆர்வலர்களும் கருத்துத்தெரிவிக்கின்றனர்  ஆகவே வால்பாறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளின் ஆதாரமாக விளங்கும் காட்டு யானைகளால் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் வனங்களினால் நமக்கு கிடைக்கும் மாசில்லாத சுத்தமான காற்றை சுவாசிக்கவும், மழை பெற்று வளம் பெறவும் அதிக சத்தமுள்ள பட்டாசுகளை தவிர்த்து யானைகளுடன் இணக்கமான முறையில் இன்முகத்தோடு  இணைந்து வாழ மனித நேயத்துடன் முயற்சிக்க உறுதியேற்போம்


நமது செய்தியாளர்: வால்பாறை ரவிச்சந்திரன்

Post a Comment

Previous Post Next Post