Followers

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சேற்றில் உறங்கிய காட்டுயானைகளை கண் இமைக்காமல் கண்டு ரசித்து வியந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்

 கோவை மாவட்டம் வால்பாறை அருகே சேற்றில் உறங்கிய காட்டுயானைகளை கண் இமைக்காமல் கண்டு ரசித்து வியந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்






கோவைமாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள்  நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில்  பல நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலைத் தோட்டம் வழியாக  குடியிருப்பு  பகுதி மற்றும் ஆற்றோரங்களில் சுற்றி  திரிகின்றன

இதை சுற்றுலாப் பயணி களும், பொதுமக்களும் பார்த்து வருகின்றனர்  இந்நிலையில் இன்று வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் 12 யானைகள் கொண்ட காட்டு யானைகள் சுற்றித்திரிந்த நிலையில்

 6 காட்டு யானைகள் அப்பகுதி ஆற்றில் ஆனந்த குளியல் இட்டு சேற்றில் படுத்து தூங்கியது  இதை அவ்வழியாக வந்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும்  ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்து வியந்தனர்

நமது செய்தியாளர்:வால்பாறை ரவிச்சந்திரன் 

Post a Comment

Previous Post Next Post