ஈரோடு – மின்வேலியை கவனித்து திரும்பிய உஷாரான யானை, சிசிடிவியில் பதிவு
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கரளவாடி கிராமத்தில் காட்டு யானை ஒன்று விவசாயத்
சரவணகுமார் என்பவரின் தோட்டத்துக்குள் வனப்பகுதியிலிருந்து வந்த யானை, தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலி கம்பியை கண்டதும் நீண்ட நேரம் அங்கே நின்றது. மின்சாரம் தாக்கும் அபாயத்தை உணர்ந்த யானை, இறுதியில் உள்ளே நுழையாமல் பின்வாங்கியது.
இந்த தருணம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் மின்வேலியை பார்த்து பின்வாங்கிய இந்த யானையின் “உஷாரான” நடத்தை, விவசாயிகளிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நமது செய்தியாளர் :முருகானந்தம்