Followers

ஈரோடு – திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

 ஈரோடு – திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை


திம்பம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி புலி, சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து திம்பம் வழியாக மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை இந்த காப்பக வனப் பகுதியின் வழியாக செல்கிறது. வனவிலங்குகள் பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் இந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.


இதனால் பகலிலும் இரவிலும் வனவிலங்குகள் சாலை ஓரங்களில் நடமாடுவதும், சாலையைக் கடப்பதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திம்பம் மலைப்பாதையின் 27-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை சுற்றித் திரிந்தது வாகன ஓட்டிகளால் கவனிக்கப்பட்டது. மேலும், இரவு நேரங்களில் சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை சாய்ந்து கிடக்கும் காட்சியும் வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர்.



இதுகுறித்து வனத்துறை எச்சரிக்கையில் கூறியதாவது:

"திம்பம் மலைப்பாதையில் வாகனத்தை நிறுத்தி இறங்கக் கூடாது. பாதையில் வனவிலங்குகள் கடந்து சென்றால், அவற்றை தொந்தரவு செய்யாமல் அமைதியாக காத்திருக்க வேண்டும். பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தனர்.


— நமது செய்தியாளர்:முருகானந்தம்

Post a Comment

Previous Post Next Post