Followers

அதிரப்பள்ளி – குட்டியுடன் நான்கு காட்டு யானைகள் தங்கும் விடுதியில் நுழைந்த பரபரப்பு

அதிரப்பள்ளி – குட்டியுடன் நான்கு காட்டு யானைகள் தங்கும் விடுதியில் நுழைந்த பரபரப்பு



சாலக்குடி:

திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே கன்னங்குழி பகுதியில் நேற்று மாலை பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றது.


மாலை சுமார் 6:30 மணியளவில், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியின் வளாகத்திற்குள் குட்டியுடன் கூடிய நான்கு காட்டு யானைகள் திடீரென நுழைந்தன. இதனால் விடுதியில் தங்கியிருந்தவர்கள் அச்சத்தில் சத்தம் போட்டுக் கொண்டு ஓடி தங்களை பாதுகாத்துக்கொண்டனர்.


அந்த தருணம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, யானைகளை மனிதர்கள் வாழும் பகுதிகளில் தொந்தரவு ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

திடீர் யானை வருகையால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


— நமது செய்தியாளர்:விபின் 

Post a Comment

Previous Post Next Post