Followers

வால்பாறையில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

 வால்பாறையில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 



வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறையில் விடியவிடிய கொட்டிக் தீர்த்து தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வால்பாறையில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சி,கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் நேற்று முன்தினம் முதலே நீர்நிலைகள் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் வானிலை ஆய்வு மையம் இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றோரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதோடு பாதிப்புகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் தாமதமின்றி துறைசார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் அறிவித்து பேரிடர் மீட்புக்குழுவினருடன் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர் இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை சின்னகல்லாறு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21 செ.மீட்டரும், சின்கோனா 12 செ.மீட்டரும், வால்பாறை 11 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் கடந்த வாரம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவந்த நிலையில் தற்போது பெய்துவரும் கனமழையால் வனப்பகுதிகள் செழிப்பாகி வனவிலங்குகளுக்கு தேவையான உணவு கிடைக்க வாய்ப்புள்ள நிலையில் வனவிலங்குகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் வாய்ப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 


நமது செய்தியாளர் :வால்பாறை ரவிச்சந்திரன்

Post a Comment

Previous Post Next Post