பாலக்காடு நெல்லியம்பதி வனச்சாலையில் தலையில் காயத்துடன் இருந்த சிறுத்தை
பாலக்காடு:
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே உள்ள நெல்லியாம்பதி வன பகுதியில், சீதர்குண்டிற்குச் செல்லும் பாப்சன் சாலையில் சிறுத்தை ஒன்று தலையில் காயத்துடன் இருப்பதை கண்ட வாகன ஓட்டி உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் அப்பகுதிக்கு விரைந்து வந்த கொல்லங்கோடு வனதுறையினர் சிறுத்தை குட்டி என்பதும் தலையில் அடிபட்டதை உறுதி செய்தனர் மேலும் சிறுத்தை குட்டியை கூண்டில் ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்
சிறுத்தையின் குட்டியின் மீது வாகன மோதியதா அல்லது வன விலங்குகளின் இடையில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட காயமா என்பது பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நமது செய்தியாளர் விபின்