வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் தடுப்புச் சுவர் கம்பியில் ஏறி இறங்கும் சிறுத்தை வீடியோ வைரல் இரவு நேரங்களில் வனச்சாலையில் வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்
வால்பாறை:
வால்பாறை பொள்ளாச்சி வன சாலையில் கவர்கல் பகுதியில் சாலையோரத்தில் சிறுத்தை ஒன்று பனிப்பொழிவில் சர்வசாதாரணமாக நடந்து சென்று தடுப்பு கம்பிமேல் ஏறி நின்று மீண்டும் கீழே இறங்கி சாலையிலேயே சென்று அருகிலுள்ள புதரில் மறைந்துள்ளது இந்த காட்சியை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது
இதனால் இரவு நேரங்களில் வனச் சாலையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்
நமது செய்தியாளர்: வடிவேல்