மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை. யானை துரத்தியதால் காரை வேகமாக ஓட்டிச் சென்று வாகன ஓட்டி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை வாகன போக்குவரத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேலும் சிறுமுகை மேட்டுப்பாளையம் வனப்பகுதி இடையே கோத்தகிரி சாலை அமைந்திருப்பதால் யானை மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.. மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை மலைப்பாதையில் கோத்தகிரி சாலையைக் கடந்து சிறுமுகை வனப்பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே குட்டியுடன் யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வந்து உடனே வாகன ஓட்டுநர்கள் சுதாரித்துக் கொண்டு வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தினர். வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது சாலையோரத்தில் சுற்றுலா பயணிகள் வந்த ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது காரை கண்டதும் அந்த யானை குட்டியுடன் காரை நோக்கி ஆவேசத்துடன் சென்றது உடனே அங்கிருந்த வனப் பணியாளர்கள் காரை உடனே எடுத்துச் செல்லும்படி கூச்சலிட்டனர் ஓட்டுநர் காரை ரிவர்ஸில் எடுத்து வேகமாக ஓட்டி சென்றார் இதனால் ஒரு மணி நேரம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் ஒரு வித பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது..
நமது செய்தியாளர் :மனோஜ்