Followers

வால்பாறை - அய்யர்பாடி பகுதியில் உலாவரும் இரண்டு கரடிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவேண்டி வனத்துறை அறிவுறுத்தல்

 வால்பாறை - அய்யர்பாடி பகுதியில் உலாவரும் இரண்டு கரடிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவேண்டி வனத்துறை அறிவுறுத்தல்




கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் இரவு நேரங்களில்  நடமாடி வருகிறது  இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் அய்யர்பாடி எஸ்டேட் சின்ன ஆஸ்பத்திரி அருகே சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது திடீரென இரண்டு கரடிகள் சாலையின் குறுக்கே ஓடி அருகேஉள்ள வனப்பகுதியில் நுழைந்துள்ளது இதை சற்றும் எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் சிறிது அச்சமடைந்து பின்னர் வாகனத்தை இயக்கி சென்றுள்ளனர் இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கரடிகளின் நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ளனர் மேலும் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கவனமாகச் செல்லவும் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் தாமதமின்றி சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


நமது செய்தியாளர் வால்பாறை ரவிச்சந்திரன்

Post a Comment

Previous Post Next Post