வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முகப்பு வாயிலில் யானை வழித்தடத்தை காப்போம் என்ற தலைப்பில் பள்ளி ஓவிய ஆசிரியர் துரைராஜ் வரைந்து அசத்தியுள்ளார்
இயற்கை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆனந்தகுமார் மற்றும் கணேஷ் ரகுராம், கூறியதாவது:
வால்பாறையின் இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வால்பாறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள்உள்ளன.
இது தவிர, ஆண்டு தோறும் கேரளா மாநிலத்தில் இருந்து யானைகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றன. யானைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும், வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சுவர்களில் யானைகளின் படங்களை வரைந்துள்ளோம். இவ்வாறு, கூறினர்.
நமது செய்தியாளர் வடிவேல்