Followers

கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பங்கேற்பு

 கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பங்கேற்பு


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உலாந்தி வனசரக எல்லையில் உள்ள டாப்ஸ்லிப் அடுத்த கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இந்த முகாமில் கும்கி யானைகள் உட்பட மொத்தம் 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வன பாதுகாப்பு பணிகளுக்கும், வனத்துறையின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் யானை பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது


.
இந்தாண்டு நடைபெற்ற விழாவில் யானைகளுக்கு குழிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக அங்குள்ள விநாயகர் சன்னதியில் யானைகள் துதிகையை உயர்த்தி மண்டியிட்டு வணங்கிய காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.


பின்னர் பழங்குடியின மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து, அதனைத் தொடர்ந்து யானைகளுக்கு கரும்பு, வாழை, கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட விருப்பமான உணவுகள் வழங்கப்பட்டன.



இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

“வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல் போல யானைகளுக்காக நடத்தப்படும் இந்த விழா புதுமையான அனுபவமாக உள்ளது. ஒரே இடத்தில் 20- க்கும் மேற்பட்ட யானைகளை காண்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது” என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.


நமது செய்தியாளர் :சக்திவேல்

Post a Comment

Previous Post Next Post