தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் மழைநீரை குடித்த சிறுத்தை – இயற்கை காட்சி கவர்ந்தது
ஈரோடு மாவட்டம்:
தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை பெய்த கடும் மழைக்குப் பிறகு, சாலையில் வழிந்தோடிய மழைநீரை குடிக்கும் சிறுத்தையின் காட்சி வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மழையால் சாலை முழுவதும் நீர் தேங்கி இருந்த நிலையில், மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கிய சிறுத்தை சில நிமிடங்கள் தேங்கி மழைநீரை குடித்து சென்றது. அந்த தருணத்தை சிலர் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திம்பம் மலைப்பாதை வனவிலங்குகள் அடிக்கடி தோன்றும் பகுதியாக இருப்பதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இயக்குமாறு வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நமது செய்தியாளர்: முருகானந்தம்

