முதுமலையிலிருந்து பந்திப்பூர் செல்லும் சாலையில் யானைக்குட்டியை வேட்டையாடிய புலி. இறந்த குட்டியானை அருகே சாலை ஓரத்தில் தாய் யானை பாச போராட்டம் ... இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மைசூர் நீலகிரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு...
முதுமலையிலிருந்து மைசூர் செல்லக்கூடிய சாலை அடர்ந்த வனப்பகுதியாகும் இந்த நிலையில் பந்திப்பூர் செல்லும் சாலையில் புலி ஒன்று யானைக் கூட்டத்திலிருந்த குட்டி யானையை வேட்டையாடியது.
இதில் குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது இதனால் தாய் யானை குட்டி யானையின் அருகிலேயே ஆக்ரோஷத்துடன் நின்றது இதனால் மைசூர் செல்லக்கூடிய வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
மைசூரில் இருந்து நீலகிரி நோக்கி வரும் வாகனங்களும் சாலையிலேயே காத்திருந்தன பெரிய வாகனங்கள் யானையை கடக்கும் முயற்சிக்கும் போது ஆக்ரோசத்துடன் வாகனங்களை தாக்க வந்தது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மைசூர் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன வனத்துறையினர் பொதுமக்களை வேறு மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
நமது செய்தியாளர்
கரன்சி சிவக்குமார்