வால்பாறை அருகே வெள்ளமலை டாப் பகுதியில் 9 மேற்பட்ட காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகம் மற்றும் மானாம்பள்ளி வனச்சரகம் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதி ஒட்டி தேயிலை தோட்டங்கள் உள்ளதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை சிறுத்தை புலி மான் உள்ளிட்டவை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி அதிக அளவு தென்படுகிறது.
குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் நுழையா வண்ணம் அனைத்து எஸ்டேட் பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் 24 நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இன் நிலையில் அக்கா மலை வனப்பகுதியில் விட்டு வெளியேறிய 9 காட்டு யானைகள் வெள்ளமாலை டாப்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது இதைக் கண்ட பொதுமக்கள் வால்பாறை வனச்சரகத்திற்கு தகவல் கொடுத்தனர் வால்பாறை வனச்சரகர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் விரைந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குடியிருப்பு பகுதி அருகே தேயிலை தோட்டத்தில் யானை நிற்பதை கண்டனர் அப்போது மழையில் நனைந்தவாறு யானை ஒன்று வனத்துறை ஊழியர்களை பார்த்து தும்பிக்கையை அசைத்த வாரு மணல்களை தலையில் அள்ளி போட்டு விளையாடியது அப்போது பொதுமக்கள் மற்றும் வனத்தை ஊழியர்கள் அக்காட்சியை ரசித்துப் பார்த்தனர் பிறகு மெதுவாக வானப்பகுதிக்குள் சென்று மறைந்தது
வனத்துறை ஊழியர்கள் தெரிவிக்கையில்;
யானை எப்போதும் சாதுவாக நின்று கொண்டுதான் இருக்கும் பொது மக்கள் யாராவது தொந்தரவு செய்தா மட்டுமே அவர்களை நோக்கி விரட்டும் யானை இருக்கும் பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்பது வனத்துறை உத்தரவு அதை பொதுமக்கள் அனைவரும் மதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்
நமது செய்தியாளர் வடிவேல்