நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள், நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு தண்ணீர் தேடி உலா வருகிறது.
அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் வந்த சிறுத்தை நாயை வேட்டையாடி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக சிறுத்தைகள் நடமாடடம் குடியிருப்புகள் பகுதிகளில் அதிகமாக காணபடுவதால் வன துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமது செய்தியாளர்:கரன்சி சிவக்குமார்