Followers

குன்னூர் அருகே லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் செல்லும் சாலையில் சிறுத்தைகள் உலா நடைப்பயிற்சி செல்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கவணமாக செல்ல லேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை



 நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள், நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு தண்ணீர் தேடி உலா வருகிறது.

 அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குன்னூர் லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ்  செல்லும் சாலையில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தைகள் நடமாடடம்  அதிகமாக காணபடுவதால்    நடைப்பயிற்சிக்கு செல்வோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கவணமாக செல்ல வேண்டும்  என குன்னூர்  வனசரகர்  ரவீந்தரநாத்   எச்சரிக்கை  விடுத்துள்ளனர்.


நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார் 

Post a Comment

Previous Post Next Post