Followers

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழக எஸ்டேட் மற்றும் தேயிலை ஆலை பகுதிகளில் ஆய்வு அதைத்தொடர்ந்து நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம் நிலை குறித்து கேட்டறிந்து தமிழக முதல்வரின் அனுமதி கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை மேற்க் கொள்வதாக உறுதியளித்துள்ளார்



 கூடலுார் மற்றும் ஊட்டி பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளை ஆய்வு செய்யப்பட்ட நிலையில் வால்பாறை டேன்டீ எஸ்டேட்களை ஆய்வு செய்துள்ளேன்,. தொழிலாளர்கள்,தேயிலைத் தோட்டங்கள், உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட அனைத்து துறையிலும் மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆலோசனை கேட்டறிந்தேன், தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து வருகிறது

விரைவில் புதிய திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்படும்,டேன்டீ விற்பனை நிலையங்கள் அதிக இடங்களில் தொடங்கப்படும், தொழிற் சாலைகள் மேம்படுத்தப்படும், தொழிலாளர்களுக்கு நிலுவைகள் வழங்கப்படும், தொழிலாளர்களின் குடியிருப்புகள் மேம்படுத்தப்படும், தேயிலை சுற்றுலா தொடங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும், வால்பாறையில் டேன்டீ எஸ்டேட்கள் மூடப்படும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் அதற்கான திட்டம் எதுவும் இல்லை, டேன்டீ நிறுவனம் விரைவில் சிறப்பான அரசுத் துறையாக செயல்படும் என்றும் தெரிவித்தார் இந்த ஆய்வின் போது டேன்டீ நிர்வாக அதிகாரிகள்,வனத்துறை அதிகாரிகள் மற்றும் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் 21 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான உமா மகேஸ்வரி சுதாகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்

நமது செய்தியாளர்: ரவிச்சந்திரன்

Post a Comment

Previous Post Next Post