மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வனச்சரகங்களில் காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி, விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் அருகே நடமாடி வருகின்றன. இந்நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட இச்சிக்குழி பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் .
கோவை வனக்கோட்டம் உதவி வனப் பாதுகாவலர் திரு செந்தில்குமார் அவர்கள், போளுவாம்பட்டி வனச்சராக அலுவலர் திரு சுசீந்திரநாத் அவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் ,CWCT தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி திரு சண்முகம், ஓசை அமைப்பு சாரா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி திரு செந்தில் அவர்கள், தொண்டாமுத்தூர் உள் வட்டம் வருவாய் ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்கள், தேவராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் திரு.பழனி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் கோவை வனமண்டலம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் திரு. சதாசிவம் அவர்கள், நரசிபுரம் உதவி கால்நடை மருத்துவர் திரு கார்த்திகேயன் அவர்கள், தொண்டாமுத்தூர் கால்நடை மருத்துவர் திருமதி.சாந்தி அவர்களால் இறந்த பெண் யானையின் மீது உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ குழு இறந்த பெண் யானையின் வயது 40 முதல் 45 இருக்கலாம் எனவும் மேற்படி யானை இறந்து 2 நாட்கள் இருக்கலாம் எனவும் மருத்துவ குழு அலுவலர் தெரிவித்தார். இறப்பிற்கான காரணம் கல்லீரல் கோளாறு (Hepatitis liver disorder) என மருத்துவ அலுவலர் குழு தெரிவித்தனர். இளவயது பெண் யானை உயிரிழந்துள்ள சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது செய்தியாளர்: வடிவேல்