Followers

நூதன முறையில் வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறை


 தென்னிந்தியாவில் ஆசிய யானைகள் அதிகம் வாழும் பகுதிகளில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் மிக முக்கியப் பகுதியாக உள்ளது முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம், முத்தங்கா காட்டுயிர் சரணாலயம், நீலகிரி வனப்பகுதிகள். இவையே ஆசிய யானைகளின் கடைசி புகலிடமாக இருக்குமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உணவு மற்றும் தண்ணீரைத் தேடி இரவு நேரங்களில் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குன்னூர், குந்தா பகுதிகளிலும் யானைக் கூட்டங்கள் உலவுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

மேலும், யானை மனித எதிர்கொள்ளல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எதிர்கொள்ளல்களைத் தவிர்க்க நீலகிரி மாவட்டத்தில் யானை நடமாட்ட பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் வேட்டை தடுப்பு காவலர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் யானைகள் குடியிருப்பு பகுதிக்கு நுழைந்தால் பல்வேறு நூதன முறையில் யானைகளை கையாளுகின்றனர் இதில் யானைகளுக்கு புரியும் வகையில் மொழியில்  பேசுவதும் ஓசைகளை எழுப்புவதும் ஈடுபடுகின்றனர் இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த காட்டு யானையை வனத்துறையினர் அசால்டாக சிறு குச்சியை வைத்து காட்டுக்குள் விரட்டும் பணிகள் ஈடுபட்டனர் சத்தத்தை கேட்ட காட்டு யானை முன்னங்காலை முன்னே பின்னே வைப்பதுமாக இருந்தது தொடர்ந்து சத்தத்தை எழுப்பியதால் காட்டு யானை பிழியபடி வனப்பகுதிக்குள் சென்றது இச்செயலை பார்த்த பொதுமக்கள் வனத்துறை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்


நமது செய்தியாளர்: கரன்சி சிவக்குமார்


செய்தியாளர்கள் தேவை தொடர்புக்கு: 6380923305,8903390305

விளம்பரம் தொடர்புக்கு: 6380923305,8903390305


Post a Comment

Previous Post Next Post