Followers

வால்பாறையில் கரடிதாக்கி காயமடைந்த வடமாநில பெண் தொழிலாளர்களுக்கு வனத்துறையினர் உடனடியாக நிவாரண உதவி வழங்கினர்

வால்பாறையில் கரடிதாக்கி காயமடைந்த வடமாநில பெண் தொழிலாளர்களுக்கு வனத்துறையினர் உடனடியாக நிவாரண உதவி வழங்கினர்


 

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மாணிக்கா எஸ்டேட் என்.சி.பகுதி தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த ஹித்தினி குமாரி வயது 26, சுமதி குமாரி வயது 25 ஆகிய வடமாநிலத்தொழிலாளர்கள்  இருவரையும் கரடி தாக்கியதில் படுகாயமடைந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில்  ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ தேஜா உத்தரவிற்கிணங்க உதவி வனப்பாதுகாவலர் செல்வம் ஆலோசனைக்கு இணங்க மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன்  சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறி   நிவாரண நிதியாக தலா 10 ஆயிரம்   ரூபாயை வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் முன்னிலையில் வழங்கினார் மேலும்  கரடி நடமாடும் பகுதிகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்கள்   பாதுகாப்பாக இருக்கும்படியும் கரடி நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்


நமது செய்தியாளர் : வால்பாறை ரவிச்சந்திரன்


செய்தியாளர்கள் தேவை தொடர்புக்கு: 6380923305,8903390305

விளம்பரம் தொடர்புக்கு: 6380923305,8903390305


Post a Comment

Previous Post Next Post