எஸ்டேட் பகுதியில் தொழிலாளியை தாக்கிய கரடி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மாணிக்கா எஸ்டேட் என்.சி.பகுதி தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த ஹித்தினி குமாரி வயது 26, சுமதி குமாரி வயது 25 ஆகிய வடமாநிலத்தொழிலாளர்கள் இருவரையும் கரடி தாக்கியதில் உடல் முழுவதும் பலத்த காயத்துடன் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ தேஜா உத்தரவிற்கிணங்க உதவி வனப்பாதுகாவலர் செல்வம் ஆலோசனைக்கு இணங்க மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண நிதியாக தலா 10 ஆயிரம் ரூபாயை வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் முன்னிலையில் வழங்கினார்
குடியிருப்பு பகுதி அருகே கூண்டு வைப்பு
இந்த நிலையில் இஞ்சிப்பாறை எஸ்டேட் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதை முன்னிட்டு கரடியை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என்று எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் உத்தரவின் பேரில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. மேலும் கரடி நடமாடும் பகுதிகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கரடி நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்
நமது செய்தியாளர்: வால்பாறை ரவிச்சந்திரன்
விளம்பரம் தொடர்புக்கு: 6380923305,8903390305