Followers

வால்பாறையில் காட்டுமாடு தாக்கியதில் ஒருவர் படுகாயம்

 



கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சங்கரன் குடி (சென்டிரல்மென்ட்) மலை கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் மிதுகன் வயது 52 இவர் இன்று மதியத்திற்கு மேல் தனது குடிக்கு அருகே ஆற்றில் மீன் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காட்டுமாடு தாக்கியதில் படுகாயமடைந்தார் இதைத்தொடர்ந்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவம் அறிந்த வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மருத்துவமனையில் அவரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு மருத்துவர்களிடம் சிகிச்சை பற்றிய விவரம் கேட்டறிந்தார் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது


நமது செய்தியாளர் : வால்பாறை ரவிச்சந்திரன்

Post a Comment

Previous Post Next Post