கோவை மாவட்டம் துடியலூர் அருகே வீரபாண்டி, MVN சேம்பர் (செங்கல் சூளை) அருகில் களப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது காட்டு யானை ஒன்று படுத்துகிடப்பது கண்டறியபட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டு வனக்கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் வாயில் காயம் இருப்பது கண்டறியப்பட்டு அவுட்காயால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவரால் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மதியம் சுமார் 02:45மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் காட்டு யானை மரணமடைந்தது. அதனை தொடர்ந்து யானையின் உடலானது மாங்கரை வன ஓய்வு விடுதி வளாக பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்-வீரபாண்டி ஆகியோர் முன்னிலையில் வனக்கால்நடை மருத்துவர்கள் திரு.சுகுமார் மற்றும் திரு.விஜயராகவன் அவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது மேலும் வனத்துறை மோப்ப நாய் உதவியுடன் களப்பணியாளர்கள் இணைந்து சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.
நமது செய்தியாளர் வடிவேல்