Followers

கோவை தடாகம் பகுதியில் யானை உயிரிழந்ததை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடும் வனத்துறை

கோவை தடாகம் பகுதியில் யானை உயிரிழந்ததை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடும் வனத்துறை


 கடந்த 05-09-2023ம்தேதி கோவை வனச்சரகத்திற்குட்பட்ட 11.வீரபாண்டி பகுதியில் அவுட்காய் கடித்ததால் வாயில் காயம் ஏற்பட்டு காட்டு‌யானை ஒன்று இறந்தது தொடர்பாகவழக்குபதிவு(கோவை வனச்சரக குற்ற வழக்கு எண்26/2023) செய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட கட்டாஞ்சி மலை முதல் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட குழிக்காடு,சீலியூர்,கூடலூர்,CRPF மற்றும் கோவை வனச்சரகத்திற்குட்பட்ட தடாகம்,நஞ்சுண்டாபுரம்,வீரபாண்டி,மருதமலை,கெம்பனூர் பகுதிகளில் வன எல்லையை ஒட்டியுள்ள நிலங்களிலும், சந்தேகபடும்படியான நபர்களின் தோட்டபகுதிகள் என சுமார் 35km தொலைவிற்கு வனத்துறை மோப்ப நாய் உதவியுடன் மேற்கண்ட வனச்சரக பணியாளர்கள் 45பேர் நான்கு நாட்களாக அவுட்காய் தொடர்பான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.





 இதில் வனவிலங்கு வேட்டைக்கு பயன்படுத்தபடும் அவுட்டுகாய்கள் எதுவும் தென்படவில்லை.மேலும் தொடர்ந்து அப்பகுதிகளில் களப்பணியாளர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post