வால்பாறையில் சிறுவனை சிறுத்தை தாக்கிய பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா யூ.டி.ல் உள்ள தொழிலாளர் குடியிருப்பு அருகே சிறுத்தாக்கி ஜார்கண்ட் மாநில 7 வயது சிறுவன் பிரதீப் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் சிறுத்தை தாக்கிய காயமடைந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயகக்குநர் பார்க்கவ தேஜா உத்தரவிற்கிணங்க சிறுத்தை தாக்கிய குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வனவர் அய்யாச்சாமி மற்றும் பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் சிறுவனை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அதற்க்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளப்பட்டு வருகின்றனர் மேலும் எஸ்டேட் நிர்வாகத்தினருடன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்க் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்
நமது செய்தியாளர்:வால்பாறை ரவிச்சந்திரன்