வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் ஜார்கண்ட் மாநில 7 வயது சிறுவன் படுகாயம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட் யூ.டி.பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியின் பின்புறம் உள்ள வாசலில் சுமார் 7 மணியளவில் உக்கார்ந்து இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் பியான் என்பவரின் 7 வயது மகன் பிரதீப் குமார் என்ற சிறுவனை அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை தாக்கியதில் சத்தம் போட்டு அலறிய சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் சிறுத்தையை அப்பகுதியிலிருந்து விரட்டியுள்ளனர் சம்பவமறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ரோந்து பணி வனத்துறையினர் சிறுத்தை தாக்கியதில் தலை மற்றும் கைகளில் படுகாயமடைந்த சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் பாதிக்கபட்ட அக்குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பாக நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கிய வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் சிறுத்தை நடமாடும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கதவுகளை யாரும் திறந்து வைக்கவேண்டாம் என்றும் மாலை 6 மணிக்கு மேல் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் சிறுத்தை சிறுவனை தாக்கிய நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நமது செய்தியாளர் வால்பாறை ரவிச்சந்திரன்