கோவை தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட விநாயகன் யானை பந்திப்பூர் வனப்பகுதியில் உயிரிழந்தது
கோவை தடாகம் தலியூர் ஆனைகட்டி மாங்கரை வீரபாண்டி புதூர் ஆகிய இடங்களில் காட்டு யானை கடந்த 2021 ஆம் ஆண்டு தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த யானைக்கு விநாயகன் என்ற பெயரிட்டனர் அந்த யானையின் அட்டகாசம் அதிகரித்ததை தொடர்ந்து வனத்துறையினர் விநாயகன் யானைக்கு மயக்கி ஊசி செலுத்தி பிடித்தனர் பின்னர் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விட்டனர் அப்பகுதியில் சுற்றி திரிந்த விநாயகன் மெல்ல மெல்ல கர்நாடக வனப் பகுதி நோக்கி பயணத்தை தொடங்கியது கடந்த ஜூன் மாதத்தில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குந்திகெரே வனப்பகுதியை ஒட்டிய ஏலசெட்டி கிராமத்தில் புகழ்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது கடை சேதப்படுத்தியது இதை அடுத்து வனத்துறையினர் அந்த யானையை பிடித்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ராமப்புரா யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர் தொடர்ந்து அந்த யானைக்கு கும்கி பயிற்சி அளித்து வந்தனர் 4 மாதமாக தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி தான் மரக்கூண்டில் இருந்து வனத்துறையினர் அந்த யானையை ராமப்புறா முகாமை ஒட்டிய வனப்பகுதியில் நடமாட விட்டிருந்தனர் கும்கி பயிற்சியை விநாயகன் யானை முடித்து விட்டதாகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தனர் இந்த நிலையில் ராமபுரா பயிற்சி முகாம் அருகே வனப்பகுதிக்குள் சென்ற விநாயகன் யானை திடீர் என்று சுருண்டு விழுந்து மயங்கி கிடந்தது உடனே வனத்துறையினர் கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர் ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது நேற்று காலை வனத்துறையினர் கால்நடை மருத்துவக் குழுவினர் இறந்து போன யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர் பின்பு யானையின் உடல் அருகில் உள்ள வனப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது முன்னதாக இறந்த போன யானையின் உடல் உடலுக்கு வனத்துறையினர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர் விநாயகன் யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்திய வருகின்றனர்
நமது செய்தியாளர் வடிவேல்