மூணார் படையப்பா யானையை துன்புறுத்திய வாகன ஓட்டி மீது வழக்குப்பதிவு
( செய்தியாக பார்க்க: WILDLIFE VALPARAI YouTube CHANNEL பார்க்கவும்)
⬇️
https://youtu.be/jfGm3m7ctBo?si=FUj-ppQol5HVKGXr
கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் உள்ள மாட்டுப்பெட்டி, குண்டலா உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு காட்டு யானை புகுந்து ஊர் மக்களை அடிக்கடி அச்சுறுத்தி வந்தபோதும் நாளடைவில் அந்த யானை மீது அப்பகுதி மக்களுக்கு பாசம் ஏற்பட்டது. அந்த யானைக்கு 'படையப்பா' என்ற பெயரையும் சூட்டினர். இப்போது ஒரு படி மேலே போய் 'படையப்பா' யானைக்கு ரசிகர் மன்றமும் வந்துவிட்டது. இந்த நிலையில் நேற்று வனப்பகுதியை விட்டு வெளியேறிய படையப்பா யானை சொக்க நாடு புதுக்காடு எஸ்டேட் பகுதியில் திருவிழாவிற்காக வைக்கப்பட்டிருந்த வாழை மரத்தை சாப்பிட்டுகொண்டிருந்த படையப்பா யானை மீது ஜீப் மோதுவது போன்ற காட்சிகள் அங்குள்ள மக்கள் அந்த ஜீப் டிரைவரை கண்டித்தது போன்ற வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் பற்றி மூணார் வனத்துறை தெரிவிக்கையில்
படையப்பா யானை மீது துன்புறுத்தப்பட்ட வாகன ஓட்டின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் படையப்பா யானை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
நமது செய்தியாளர்
மூணார் ராஜா