வால்பாறையில் தாயை பிரிந்து தவித்த 5 மாத காட்டு யானை குட்டியை பலமணி நேர போராட்டத்திற்கு பின்பு தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினருக்கு பாராட்டு
(வீடியோவை பார்க்க )
⬇️
https://youtu.be/kyHR7OSTCoA?si=AXCpWeSsx4CC7wEl
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் யானைக்கூட்டத்திலிருந்து சுமார் ஐந்து மாத காட்டு யானைக்குட்டி ஒன்று பிரிந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் தனியாக சென்று நடமாடியது வனத்துறையினரால் கண்டறியப்பட்டு மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் களப்பணியாளர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தனியாக பரிதவித்து நடமாடிய குட்டியானையை பெரும் முயற்சியில் பிடித்து மனிதவாடை இல்லாதவாறு ஆற்றில் குளிக்க வைத்து வாகனத்தில் ஏற்றி வனப்பகுதி அருகே கொண்டு சென்று ட்ரோன் கேமரா மூலம் தாயுடன் நடமாடும் காட்டுயானை கூட்டத்தை கண்டறியப்பட்டு சுமார் ஐந்து மணிநேர போராட்டத்திற்கு பின்பு பரிதவித்து வந்த குட்டி யானையை அடர்ந்த வனப்பகுதியிலிருந்த அதன் தாயுடன் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டது இதைத்தொடர்ந்து நான்கு தனி கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் வனத்துறையினரின் இந்த சிறப்புவாய்ந்த பணியை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்
செய்தியாளர் வால்பாறை: ரவிச்சந்திரன்