தண்ணீர் பைப்புகளை உடைத்து எரிந்த காட்டு யானை
வீடியோவை பார்க்க.
⬇️
https://youtu.be/Te2BOVXnEbQ?si=mpnCS5ReNuTR6ZEO
கோவை தொண்டா முத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவரா யபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும். இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களின் வழியாக இடம் பெய்கிறது இதனால் விவசாய நிலங்கள் புகுந்து அங்கு விளைவிக்கக் கூடிய பயிர்களை சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில்
தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவர் குப்பேபாளையம் பகுதி 2 ஏக்கர் பரப்பளவில் தென்னை கன்று விவசாயம் செய்து வருகிறார் கடந்த 30 ஆம் தேதி இரவு காட்டு யானை ஒன்று விவசாய பூமியில் தெண்ணை மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சக் கூடிய பைப்பை உடைத்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இந்த காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
இதைப்பற்றி வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கையில்: தென்மேற்கு பருவமழையும் வடகிழ்க்கு பருவம் மலையும் பொய்த்துப் போனதால் மலைப்பகுதிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது இதனால் தண்ணீர் அருந்துவதற்காக வனப்பகுதி ஒட்டி உள்ள கிராம பகுதிக்குள் நுழைந்து விடுகிறது இதை தடுக்க யானைகள் வழித்தடங்களில் தண்ணீர் தொட்டிகள் அதிகளவு அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்
நமது செய்தியாளர் :கோவை நேசராஜ்