வால்பாறையில் தாயை பிரிந்த காட்டுயானை குட்டி தாயுடன் நிம்மதியாக உறங்கும் காட்சியால் வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்
வீடியோவை பார்க்க:
⬇️
https://youtu.be/8cIS-4loMT8?si=xvpvXywscw68pjCf
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கடந்த 29 ஆம் தேதியன்று யானைக்கூட்டத்திலிருந்து பிரிந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் தனியாக சென்று நடமாடிய ஐந்து மாத காட்டுயானைக்குட்டியை மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வனப்பணியாளர்கள் பிடித்து மனிதவாடை இல்லாதவாறு ஆற்றில் குளிக்க வைத்து வாகனத்தில் ஏற்றி சென்று ட்ரோன் கேமரா மூலம் அந்த காட்டுயானை கூட்டம் கண்டறியப்பட்டு பரிதவித்து வந்த குட்டி யானையை அடர்ந்த வனப்பகுதியில் அதன் தாயுடன் பாதுகாப்பாக சேர்கப்பட்டு தொடர்ந்து நான்கு தனி கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர் இந்நிலையில் அந்த காட்டுயானை குட்டி தனது தாயுடன் படுத்து பாதுகாப்புடன் நிம்மதியாக உறங்கும் காட்சியை இன்று ட்ரோன் கேமரா மூலம் கண்டறிந்து புகைப்படம் எடுத்துள்ளனர் இந்த காட்சி வனத்துறையினருக்கு பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
செய்தியாளர் வால்பாறை ரவிச்சந்திரன்