கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வடமாநில தொழிலாளிகள் படுத்து உறங்கிய தகர செட்டுக்குள் நுழைந்த காட்டு யானைகள் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் மூன்று யானைகள் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கதிர் நாயக்கன்பாளையம் பகுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்துள்ளது. அப்போது அங்கு கட்டிட தொழிலாளர்கள் தங்கி உள்ள தகர செட்டுகளை உடைத்து மூன்று யானைகளும் அரிசியை தேடியுள்ளது.
இதனை தொடர்ந்து தகர செட்டுக்குள் தங்கி இருந்த மூன்று வட மாநில தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளேயே பதுங்கிக் கொண்டுள்ளனர். தொடர்ந்து எதிர் வீட்டில் குடியிருக்கும் நபர்கள் வட மாநில தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியே வரும்படி அறிவுறுத்தினர் இதனைத் தொடர்ந்து ஒரு தொழிலாளி மட்டும் தகர செட்டுக்குள் இருந்து வெளியே ஓடி அருகில் உள்ள குடியிருப்புகள் புகுந்து உயிர் தப்பினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நமது செய்தியாளர் வடிவேல்