வால்பாறையில் சிறுத்தை நடமாடிய வீடியோ - இணையத்தில் வைரல்
கோவை மாவட்டம் வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் வனப்பகுதியில் உள்ள வால்பாறை சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல வனவிலங்குகள் இங்கு வாழ்கின்றன
வால்பாறை பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வனத்தை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதியில் புகுந்து அடிக்கடி கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு காரில் வால்பாறை சென்ற சுற்றுலா பயணிகள் வால்பாறையில் இருந்து கருமலை வழியாக வரும்பொழுது சாலையில் சிறுத்தை இருப்பதை கண்டு வாகனத்தை நிறுத்தி சிறுத்தையை தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.
நமது செய்தியாளர் வடிவேல்