நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் திரும்ப செல்ல மறுக்கும் எட்டு காட்டு யானைகள்...!!! பொங்கல் பண்டிகையை கூட குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் யானைகளால் அலைக்கழிக்கப்படும் வன த்துறையினர்......
வீடியோவை பார்க்க
⬇️
https://youtu.be/ymBu5m5Kc28?si=AjIJB_MridjNyS4r
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த பத்து காட்டு யானைகளில் எட்டு காட்டு யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளது,
இதனைத் தொடர்ந்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் இரவும் பகலும் பாராமல் யானைகளை கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறின்றி விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் பொங்கல் தினமான நேற்று மாலை குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது அப்போது வனத்துறையினர் எப்படியோ இன்றாவது யானைகளை மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு விரட்டி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த பொழுது மீண்டும் 8 காட்டு யானைகளும் டபுள் ரோடு அருகே உள்ள மயான பூமியில் மீண்டும் வந்து விட்டது இதனால் வனத்துறையினர் மிகவும் மனச்சோர்வடைந்தனர்பொங்கல் பண்டிகை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் குன்னூர் வனத்துறையினர் வனச்சரகர் முதல் கடை நிலை ஊழியர் வரை யானைகளால் மிகவும் சோர்வடைந்தனர் இருந்த போதிலும் வனத்துறை பணி வன வனவிலங்குகளை காக்கும் பணியாக இருப்பதால் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு குடியிருப்பு பகுதி அருகே யானைகள் செல்லா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்