பொள்ளாச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காடம்பாறை சென்ற அரசு பேருந்தை அப்பர் ஆழியார் மரப்பாலம் அருகே வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் அச்சம் அடைந்த பேருந்து பயணிகள்..
பொள்ளாச்சி அடுத்துள்ள காடம்பாறை பகுதியில் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகின்றது..
இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு உட்பட்ட அப்பர் ஆழியார், காடம்பாறை மற்றும் மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்காக அரசு ஒன்று பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து காடம்பாறை பகுதிக்கு சென்றது.
அப்போது அப்பர் ஆழியார் அருகே உள்ள மரப்பாலம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அரசு பேருந்த வழிமறித்தது.. அப்போது பேருந்து ஓட்டுனர் ஆரணை ஒழித்ததால்
கோபம் கொண்ட காட்டு யானை ஆக்ரோசமாக பேருந்த தாக்க முயன்றாது சுதாரித்துக் கொண்ட அரசு பேருந்து ஓட்டுனர் காட்டு யானையிடம் இருந்து நீண்ட நேரம் போராடி சாதுர்த்தியமாக பேருந்தை ஓட்டுநர் நகர்த்திச்சென்றர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
நமது செய்தியாளர் சக்திவேல்