Followers

ஈரோடு தாளவாடி:கேர்மாளம் வனச் சாலையில் வாகனங்களை வழிமறைத்த ஒற்றைக் கொம்பன் யானை

 கேர்மாளம்  வனச் சாலையில் வாகனங்களை  வழிமறைத்த ஒற்றைக் கொம்பன் யானை




 சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சர்கள் உள்ளன இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. யானைகள் உணவு தண்ணீர் தேடி வனச்சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் வனச்சாலையில்  வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் கொம்பன் யானை வனச்சாலையில் உலா வந்தது. அவ்வழியாக சென்ற  அனைத்து வாகனங்களையும் வழிமறைத்து  நின்றது இதைகண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி இயக்கினார்ஆனால் எதுக்கும் அசராத ஒற்றை கொம்பன் யானை வாகனங்களை ஏதும்  செய்யாமல் வாகனத்தில் உணவு ஏதாவது உள்ளதா என தேடி பார்த்து சென்றது .சிறிது நேரம் அங்கும் இங்கும் உலா வந்த யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


நமது செய்தியாளர் முருகானந்தம் மற்றும் கணேசன்

Post a Comment

Previous Post Next Post