Followers

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோழிகமுத்தி வளர்ப்பு யானை முகாம் மற்றும் வனத்துறையினர் பராமரிக்கப்பட்டு வரும் புலியினை வனப் பகுதிக்குள் விடுவது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு மேற்கொண்டார்..

 பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோழிகமுத்தி வளர்ப்பு யானை முகாம் மற்றும் வனத்துறையினர் பராமரிக்கப்பட்டு வரும் புலியினை வனப் பகுதிக்குள் விடுவது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு  ஆய்வு மேற்கொண்டார்..








தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பிரியா சாகு  பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானை முகாமுக்கு வருகை தந்து  அங்குள்ள வளர்ப்பு யானைகள் பராமரிப்பது குறித்து கேட்டிருந்த சுப்ரியா சாகு அப்பகுதியில் குடியிருந்து வரும் பழங்குடியின மலைவாழ் மக்களுடன் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டுறிந்ததோடு, பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் இடங்களை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டார்..


மேலும் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி மற்றும் கூமட்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்காக வனத்துறை சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை துவக்கி வைத்தார்..


இதைத்தொடர்ந்து வால்பாறை பகுதியில் உள்ள அக்காமலை பகுதியில் உள்ள புல்மலை பகுதிக்கு சென்ற கூடுதல் தலைமைச் செயலாளர் நமது மாநில விலங்கான வரையாடுகள் வாழ்விடம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்..


மேலும் வால்பாறை பகுதியில் தாயை விட்டு பிரிந்த நான்கு மாத யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்த்த வனசரகர் மணிகண்டன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும் ரொக்க பரிசாக 5000 ரூபாயும் வழங்கினார்..


மேலும் இதனைத் தொடர்ந்து மானாம்பள்ளி மந்திரிமட்டம் பகுதியில் கூண்டில் வைத்து வனத்துறையினர் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் புலியை நேரில் பார்த்து அதன் பராமரிப்பு குறித்தும் இந்த புலியினை வனப்பகுதிக்குள் ஆய்வுகளையும்  வனத்துறை அதிகாரியிடம் கேட்டிருந்தார், இந்த ஆய்வின்போது கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனரும் ராமசுப்பிரமணியம் துணை இயக்குனர் பார்க்கவே தேஜா உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்..


நமது செய்தியாளர்: சக்திவேல்

Post a Comment

Previous Post Next Post