Followers

வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானை கூட்டம் திடீரென பேருந்தை வழிமறித்தது.

 வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானை கூட்டம்  திடீரென பேருந்தை வழிமறித்தது. 




கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளிவர வேண்டாம் என்று இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது இந்நிலையில்

வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய  காட்டு யானை கூட்டம்  பொள்ளாச்சியில் இருந்து நேற்று மாலை கருமலை எஸ்டேட் பகுதிக்கு அரசு பேருந்து சென்றது. பயணிகள் 25 பேர் பயணித்தனர்.

கருமலை எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம்  திடீரென பேருந்தை வழிமறித்தது. சாலையில் யானை நின்றதை பார்த்ததும்  ஓட்டுநர், சுதாரித்துக் கொண்டு பேருந்தை சில அடி தூரத்தில் நிறுத்தி விட்டார்.


யானை அங்கிருந்து நகராமல் வெகுநேரமாக அங்கேயே நின்றிருந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். சிறிது நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post