யானைக்கு டாட்டா காட்டிய அரசு பேருந்து ஓட்டுனர் வைரல் ஆகும் வீடியோ
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகளை காப்பகத்தை மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதி முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் உணவு தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் சாலையில் உலா வருவதும் சாலையில் செல்லும் வாகனங்களில் உணவு ஏதாவது உள்ளதா என தேடிவருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் தாளவாடியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான காரப்பள்ளம் அருகே வனத்துறை சோதனைச் சவாடி அருகே செல்லும்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஒற்றைக் காட்டி யானை பேருந்து வழி மறித்து நின்றது பின்னர் பேருந்து நோக்கி வந்தது இதனை கண்ட பேருந்து ஓட்டுனர் பேருந்து பின்னோக்கி இயக்கி யானைக்கு டாட்டா காட்டினார் இந்த காட்சி பஸ்ஸில் பயணம் செய்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது
நமது செய்தியாளர் தாளவாடியில் இருந்து கணேசன்
Tags:
Elephant