Followers

வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் தும்பிக்கை இல்லாமல் உலா வரும் குட்டி யானை

 வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் தும்பிக்கை இல்லாமல் உலா வரும் குட்டி யானை




வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் தும்பிக்கை இல்லாத குட்டியானை மீண்டும் வருகை தந்த நிலையில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த  வருடம்  அதிரப்பள்ளி வனப்பகுதியின் ஓரம் தாயுடன் சுற்றிய தும்பிக்கை இல்லாத குட்டியானையை சுற்றுலா பயணிகள் பார்த்தனர் பின்னர் வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்து வனத்துறையினர் அதை ஆய்வு செய்தபோது குட்டி யானை தண்ணீர் குடிக்கும் பொழுது முதலை அல்லது ஏதாவது விலங்கு தாக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில் குட்டி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குட்டி யானை கூட்டமாக வந்ததால் வனப்பகுதிக்கு சென்றது. அதேபோல் சில மாதங்களுக்கு பின்பு வனப்பகுதி ஓரம் மீண்டும் வனத்துறையினர் பார்த்து ஆய்வு செய்தனர். தற்போது நேற்றைய முன்தினம் அதிரப்பள்ளி காலாடி பிளாண்டேஷன் ரப்பர் தோட்டத்தில் அருகே யானையை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். 

அதை வனத்துறையினர் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்ததில் குட்டி யானை நலமுடன் உள்ளது. உடல்நிலை தேறி உள்ளதும் தெரியவந்தது. மீண்டும் இன்று காலை வால்பாறை சாலக்குடி சாலையில் தாயுடன் குட்டி யானை ரோட்டை கடந்து சென்ற காட்சி தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post