சாலைகளில் யானை கடப்பதை பற்றியும் யானையின் முக்கியத்துவத்தை பற்றியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தற்போது உங்களுக்கு பகிர்கிறோம்
YouTubeயில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது:
⬇️
https://youtu.be/-BKaUCvfD0I?si=sjOWNifLzdwH7sz_
காடுகளில் யானைகளை எதிர்கொள்வது எனபது ஒரு கலை. அதிலும் சாலைகளில் செல்லும் யானைகளை கடப்பது என்பது பல உயிர்களை அடமானம் வைக்கும் ஒரு செயலும் கூட. யானைகளின் உடல் அசைவுகளின் மூலம் அது மனதில் என்ன எண்ணிக் கொண்டு இருக்கிறது என்பதை ஓரளவு அறியலாம். தனியாக இருக்கும் யானைகளும், குட்டிகளுடன் இருக்கும் யானைகளும் மிகவும் ஆபத்தானவை. அவைகளின் கோபம் ஒரு ஹாரன் ஒலியில் உச்சத்தை அடைந்து விடும். வேகமாக கடக்க முயலும் வெள்ளை வண்ண கார்கள் இவைகளின் முதல் பகையாகும். சாலைகளில் யானைகளுக்கு என்ன வேலை ? என்று கேட்க்கும் அறிவாளிகளுக்கு சொல்கிறேன், யானைகளின் வழித்தடங்களிள் தான் நாம் சாலைகளை இட்டு இருக்கிறோம். சில நூறு ரூபாய் எரிபொருள் செலவை மிச்சப் படுத்த எண்ணி விலைமதிப்பில்லா காடுகளை துண்டாடி வைத்து இருக்கிறோம். எனவே சாலையை கடக்க முயலும் யானைகளை மதித்து அவைகள் கடந்த பின்னே நாம் செல்வது நமக்கும் அவைகளுக்கும் நலம் பயக்கும். எந்த யானைகளுக்கும் வேண்டுதல் இல்லை மனிதர்களுடன் வந்து மோத வேண்டும் என்று. பின்னர் இந்த மோதல்கள் எவ்வாறு எழுந்தது என்று பார்த்தால் அதற்கு நாமே காரணம்.வெள்ளையர்களும், கொள்ளையர்களும் காடுகளின் வளத்தை கொள்ளை அடிப்பதை வேடிக்கை பார்த்தோம் ... இன்று காடுகளுக்குள் ஒன்றும் இல்லை. எனவே, அவைகள் காடுகளை விட்டு உணவுக்கும் நீருக்கும் வெளியில் வருகிறது. இனி நாம் சிந்திக்க வேண்டியது எல்லாம் காடுகளின் வளத்தை பெருக்கி வனவிலங்குகளை எப்படி வன எல்லையில் கட்டுப் படுத்த வேண்டும் என்பதே. காடுகள் இந்த காட்டுயிர்களின் மூலமே பிழைத்து இருக்கிறது . அவைகள் இல்லாத காடுகள் சத்தியமாக நமக்கு நீரையும், சோறையும் தராது.
நமது செய்தியாளர் வடிவேல்