பந்தலூர் அருகேயுள்ள பெருங்கரை மேங்கோரேஞ்ச் 18 லைன் பகுதியில் மீண்டும் ஐந்தாம் நபராக சிறுத்தை தாக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்...
கடந்த 15 நாட்களில் நான்கு நபர்களை சிறுத்தை தாக்கியுள்ள நிலையில் இன்று மீண்டும் மூன்று வயது சிறுமியை தாக்கி தேயிலை தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றுள்ளது.
உடனே சிறுமியின் கதறல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் தேயிலை தோட்டத்திற்குள் சென்று சிறுத்தை இடமிருந்து சிறுமியை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
குறிப்பாக கடந்த வாரம் சிறுத்தை தாக்கி பழங்குடியின பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீண்டும் சிறுமியை தாக்கி சிறுமி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இன்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் கிராம மக்கள் தற்போது கூடலூரில் இருந்து பந்தலூர் வழியாக கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 15 நாட்களில் சிறுத்தை தாக்கி சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத்துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்