பந்தலூர் அருகே 17 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை புலியை வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவினருடன் இணைந்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பொதுமக்கள் மகிழ்ச்சி.
-- பிடிப்பட்டது நான்கு வயது ஆண் சிறுத்தை எனவும் முதுமலை புலிகள் காப்பகத்தில் சிகிச்சைக்குப் பின்பு சிறுத்தைப் புலியின் நிலவரம் குறித்து அறிவிக்கப்படும் என வனத்துறை விளக்கம்.
YouTubeயில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது
⬇️
https://youtu.be/TVeIjSV79t8?si=_jAg4D5MzEga2fjG
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள ஏலமன்னா, மேங்கோ ரேஞ்ச் ,சேவியர்மட்டம் குடியிருப்புகள் , தேயிலை தோட்ட பகுதிகளில் கடந்த 17 நாட்களுக்கு மேலாக முகாமிட்ட சிறுத்தை தாக்கி பழங்குடியின பெண் மற்றும் நேற்று வடமாநில தொழிலாளியின் மகள் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த நிலையில்,நான்கு பேரை தாக்கியது.இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிக்க முதுமலை மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதியில் இருந்து இரண்டு கால்நடை மருத்துவ குழுவினர், 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் சிறுத்தை புலி கண்காணித்து வந்தனர் இந்நிலையில் இன்று பிற்பகல் சுமார் இரண்டு முப்பது மணி அளவில் பெருங்கரை அம்புரோஸ் கார்னர் பகுதியில் இரண்டு முறைமயக்க ஊசி செலுத்தி சிறுத்தை புலி பிடிக்கப்பட்டது. அவ்வாறு பிடிபட்ட சிறுத்தை புலி ஆண் சிறுத்தை எனவும் நான்கு வயது இருக்கலாம் எனவும் உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக வேட்டையாடும் திறனை இழந்ததால் மனிதர்களை வேட்டையாடு துவங்கியிருக்கலாம் என வனத்துறையினர் கூறிய நிலையில் பிடிபட்ட சிறுத்தையை
முதுமலை வனவிலங்கு மையத்திற்கு கொண்டு செல்லப்படுமா அல்லது வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுமா என பிறகு அறிவிக்கப்படும் என வனத்துறையினர் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது.கடந்த 17 நாட்களாக சிறுத்தை புலி அச்சத்தால் வீட்டில் முடங்கி கிடந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
நமது செய்தியாளர்:கரன்சி சிவக்குமார்